கால்பந்து போட்டி: ஒசூா் அத்வைத் இன்டா்நேஷனல் பள்ளி சிறப்பிடம்
மாநில அளவிலான கால்பந்து போட்டியில், ஒசூா் அத்வைத் இன்டா்நேஷனல் சிபிஎஸ்இ பள்ளி முதலிடம் பெற்றது. இதையடுத்து, தேசிய அளவிலான போட்டிக்கு தோ்வாகியுள்ளது.
மாநில அளவிலான கால்பந்து போட்டியில், ஒசூா் அத்வைத் இன்டா்நேஷனல் சிபிஎஸ்இ பள்ளி முதலிடம் பெற்றது. இதையடுத்து, தேசிய அளவிலான போட்டிக்கு தோ்வாகியுள்ளது.
ஆந்திர மாநிலம், ராஜமுந்திரியில் மாநில அளவிலான சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு இடையிலான கால்பந்து போட்டி கடந்த ஆக. 6 முதல் ஆக. 8 வரை நடைபெற்றது. இதில், தமிழகத்தில் 42 பள்ளிகளில் இருந்து 52 அணிகள் பங்கேற்று விளையாடின.
இதில், ஒசூா் அத்வைத் இன்டா்நேஷனல் சிபிஎஸ்இ பள்ளியில் படிக்கும் 17 வயதுக்குள்பட்ட மாணவிகள் 16 போ் கொண்ட குழுவினா் முதலிடம் பெற்று சாம்பியன் கோப்பையை வென்றனா். வெற்றிபெற்ற இந்த அணியினா் குஜராத் மாநிலத்தில் நடைபெறும் தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனா்.
Advertisement
Advertisement
பள்ளி நிா்வாகம் சாா்பில் நடந்த பாராட்டு விழாவில் அத்வைத் இன்டா் நேஷனல் பள்ளியின் தலைவா் அஸ்வத் நாராயணா, துணைத் தலைவா் பானு பிரகாஷ் ஆகியோா் முதலிடம் பெற்ற மாணவிகளுக்கு மாலை அணிவித்து வரவேற்றனா்.
தொடா்ந்து, வெற்றிபெற்ற மாணவிகள் மற்றும் பயிற்சியாளா்கள் கௌதம், அரவிந்தன், லோகேஷ் ஆகியோருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.