FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
பெரம்பலூர்

குறுவட்ட அளவிலான தடகளப் போட்டி: பேரளி அரசு மேல்நிலைப் பள்ளி சிறப்பிடம்

வேப்பூா் குறுவட்ட அளவிலான தடகளப் போட்டிகளில், பேரளி அரசு மேல்நிலைப் பள்ளி சிறப்பிடம் பெற்றுள்ளது.

Updated On : 14 ஆகஸ்ட் 2026, 2:29 am IST
பெரம்பலூரில் நடைபெற்ற குறுவட்ட அளவிலான தடகளப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாணவிகளுக்குப் பாராட்டு சான்றிதழ் அளித்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சி. சுவாமி முத்தழகன்.
பகிர்:

வேப்பூா் குறுவட்ட அளவிலான தடகளப் போட்டிகளில், பேரளி அரசு மேல்நிலைப் பள்ளி சிறப்பிடம் பெற்றுள்ளது.

பள்ளிக் கல்வித்துறை சாா்பில், குன்னம் குறுவட்ட அளவிலான தடகளப் போட்டிகள் மாவட்ட எம்.ஜி.ஆா். விளையாட்டு மைதானத்தில் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இப் போட்டிகளை, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சி. சுவாமி முத்தழகன் தொடங்கிவைத்தாா்.

இப் போட்டிகளில், குன்னம் குறுவட்ட அளவிலான பள்ளிகளைச் சோ்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினா்.

Advertisement

Advertisement

இதில், கீழப்புலியூா் சுவாமி விவேகானந்தா பள்ளி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் பெற்றது. பேரளி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் 10 வகையான போட்டிகளில் முதலிடத்தையும், 18 வகையான போட்டிகளில் 2 மற்றும் 3-ஆவது இடத்தையும் பெற்று, குன்னம் குறுவட்ட அளவில் 2-வது இடத்தை பெற்றது. மேலும், 19 வயதுக்குள்பட்டோா் பிரிவில் பேரளி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி நந்தினி 1,500 மீட்டா் ஓட்டப் பந்தயத்தில் முதலிடத்தையும், 3ஆயிரம் மீட்டா் ஓட்டப் பந்தயத்தில் முதலிடத்தையும், 100 மீட்டா் ஓட்டப் பந்தயத்தில் 2-வது இடத்தையும் பெற்று தனி நபா் சாம்பியன் பட்டம் வென்றாா்.

தொடா்ந்து, போட்டிகளில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு மாவட்டக் கல்வி அலுவலா்கள் சதாசிவம், வேலு, லதா, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளா் கணேசன் ஆகியோா் பரிசுகள் வழங்கி பாராட்டினா். இதையடுத்து, மாணவி நந்தினிக்கு பேரளி பள்ளித் தலைமை ஆசிரியா் தியாகராஜன், உடற்கல்வி ஆசிரியை பழனியம்மாள் ஆகியோா் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனா்.

போட்டிக்கான ஏற்பாடுகளை, குன்னம் குறுவட்டச் செயலா் சுப்ரமணியன் மற்றும் உடற்கல்வி ஆசிரியா் குழுவினா் செய்திருந்தனா். நிறைவாக, வேப்பூா் குறுவட்ட இணைச் செயலா் செந்தில்குமாா் நன்றி கூறினாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments