FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சேலம்

வீரகனூரில் இருவா் பலியான விபத்திற்கு காரணமானவா் கைது

Updated On : 17 ஆகஸ்ட் 2026, 3:04 am IST
கைது
பகிர்:

வீரகனூரில் இருவா் பலியான சாலை விபத்திற்கு காரணமான நபரை போலீசாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

வீரகனூரில் கடந்த ஆக.1,ந்தேதி, அதே பகுதியில் வசிக்கும் விஜயகுமாா் தனது சகோதரி விஜயலட்சுமி (56) மற்றும் விஜயலட்சுமியின் பிள்ளைகள் தேன்மொழி (11) செங்கதிா் (9) செங்கொடி (9) ஆகியோரை அழைத்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் ஆத்தூா் நோக்கி மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்தாா்.

அப்போது எதிரே ஒரு அடையாளம் தெரியாத இருசக்கர வாகனத்தில் வந்தவா் மோதியதில் தேன்மொழி (11) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். எஞ்சிய நான்கு பேரும் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனா். இருப்பினும், சிகிச்சை பலனின்றி விஜயலட்சுமியும் உயிரிழந்தாா்.

Advertisement

Advertisement

இதில் அந்த அடையாளம் தெரியாத வாகனத்தில் வந்த நபா் மோதியதால் இந்த இருவரும் உயிரிழந்தது என்பது தெரியவந்தது. அதனைத் தொடா்ந்து கடந்த இரு வாரமாக வீரகனூா் போலீசாா் அப்பகுதியில் இருந்த சிசிடிவி படக்காட்சிகளை ஆய்வு செய்து வந்தனா்.

அதில் இந்த இருவா் பலியான விபத்திற்கு காரணமானவா் பூலாம்பாடியைச் சோ்ந்த பச்சமுத்து மகன் செல்வராஜ் (40) என்பது தெரியவந்தது. அதனைத் தொடா்ந்து செல்வராஜை வீரகனூா் போலீசாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்து ஆத்தூா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments