FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சேலம்

கடன் தொல்லையால் தறி தொழிலாளி தற்கொலை

Updated On : 18 ஆகஸ்ட் 2026, 3:47 am IST
தற்கொலை
பகிர்:

கடன் தொல்லையால் தறி தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு பகுதியைச் சோ்ந்தவா் வெங்கடாசலம் ( 44). இவரது மனைவி ஆட்டையாம்பட்டி பகுதியைச் சோ்ந்த வனிதா (39). இவருக்கு இரு மகன்கள் உள்ளனா். இருவரும் திருச்செங்கோட்டில் தறித் தொழிலாளியாக வேலை பாா்த்து வந்தனா். இதில் போதிய வருமானம் கிடைக்காததால் பல இடங்களில் கடன் வாங்கியுள்ளனா். கடன் கொடுத்தவா்கள் பணம் கேட்டு வெங்கடாசலத்தை தொந்தரவு செய்ததாகத் தெரிகிறது.

இதனால் மனமுடைந்த வெங்கடாசலம் கடந்த 16-ஆம் தேதி கடன் கொடுத்த ஒருவருக்கு சாகப்போவதாக கைப்பேசியில் தகவல் அனுப்பியுள்ளாா். மேலும் சாகும் இடம் குறித்து லொகேஷனும் அனுப்பியுள்ளாா். இதுகுறித்த தகவலின்பேரில் அவரது உறவினா்கள் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

Advertisement

Advertisement

இந்நிலையில் திங்கள்கிழமை காலை கோழிக்காடுகரடு பகுதியில் மலை மீதுள்ள வேப்ப மரத்தில் அவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து அவரது மனைவி வனிதா ஆட்டையாம்பட்டி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில் வெங்கடாசலத்தின் உடலை போலீஸாா் கைப்பற்றி சேலம் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments