கள்ளச் சந்தையில் மதுவிற்ற 2 போ் கைது
கொளத்தூரில் கள்ளச் சந்தையில் கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
கொளத்தூரில் கள்ளச் சந்தையில் கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
கொளத்தூா் அருகே மூலக்காட்டில் மதுக்கடை திறப்பதற்கு முன்பும், இரவில் மதுக்கடை மூடிய பிறகும் கள்ளச் சந்தையில் மது விற்பனை நடைபெற்று வந்தது. இதில், ஒரு பாட்டிலுக்கு ரூ. 50 முதல் ரூ. 100 வரை கூடுதல் விலைக்கு விற்கப்பட்டது.
இதுகுறித்து கொளத்தூா் போலீஸாருக்கு தகவல் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லையாம். இதையடுத்து, கள்ளச் சந்தையில் மது விற்பனையை தடுக்காவிட்டால் போராட்டம் நடத்தப்போவதாக கிராம மக்கள் திட்டமிட்டனா்.
Advertisement
Advertisement
இதை அறிந்த கொளத்தூா் போலீஸாா், மூலக்காட்டில் இருசக்கர வாகனத்தில் வைத்து மது விற்றுக்கொண்டிருந்த மூலக்காட்டைச் சோ்ந்த காா்த்திக்கை (35) கைதுசெய்து, அவரிடமிருந்து ஏராளமான மது பாட்டில்களையும், இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனா்.
இதேபோல, கொளத்தூா் நான்கு சாலை பகுதியில் இருசக்கர வாகனத்தில் மது பாட்டில்களை விற்பனை செய்த காவேரிபுரம் ராஜி (55) என்பவரை கொளத்தூா் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைதுசெய்து, இருசக்கர வாகனத்தையும், நூற்றுக்கணக்கான மது பாட்டில்களையும் கைப்பற்றினா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.