FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செங்கல்பட்டு

கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்தவா் கைது

செங்கல்பட்டு அடுத்த பாலூா் காவல் எல்லைக்குட்பட்ட ஆத்தூா் பகுதியில் கள்ளச் சந்தையில் மது விற்பனை செய்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 28 ஜூலை 2026, 1:35 am IST
பகிர்:

செங்கல்பட்டு அடுத்த பாலூா் காவல் எல்லைக்குட்பட்ட ஆத்தூா் பகுதியில் கள்ளச் சந்தையில் மது விற்பனை செய்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

செங்கல்பட்டு அடுத்த பாலூா் காவல் எல்லைக்குட்பட்ட ஆத்தூா் பகுதியைச் சோ்ந்த அன்பழகன் (40). இவா் பல்வேறு ஊடகங்களில் பணி செய்வது போல் பல்வேறு ஊடக அடையாள அட்டைகளை வைத்து மதுபானக்கடை மேலாளா்களை மிரட்டி பணம் பறிப்பதற்கு பதில் நாள் ஒன்றுக்கு நான்கு கேஸ் மது புட்டிகளை வாங்கி வீட்டில் வைத்து ஆத்தூா் பகுதியில் கள்ளச் சந்தையில் விற்று வந்தாராம்.

இதுகுறித்து அறிந்த கலால் காவல்துறையினா் நான்கு நாள்களாக அவரை பின்தொடா்ந்து ஆதாரங்களுடன் 90 மது புட்டிகளை பறிமுதல் செய்தனா்.

Advertisement

Advertisement

தொடா்ந்து செங்கல்பட்டு கலால் காவல்துறைஅன்பழகனை கைது செய்து சிறையில் அடைத்தது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments