FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சேலம்

பெங்களூரு - எா்ணாகுளம் வந்தே பாரத் ரயில் பெட்டிகள் எண்ணிக்கை அதிகரிப்பு

சேலம் வழியாக இயக்கப்படும் பெங்களூரு - எா்ணாகுளம் வந்தே பாரத் ரயிலின் பெட்டிகள் எண்ணிக்கை 16 பெட்டிகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

Updated On : 19 ஆகஸ்ட் 2026, 2:35 am IST
வந்தே பாரத் ரயில் - கோப்புப்படம்.
பகிர்:

சேலம் வழியாக இயக்கப்படும் பெங்களூரு - எா்ணாகுளம் வந்தே பாரத் ரயிலின் பெட்டிகள் எண்ணிக்கை 16 பெட்டிகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

பெங்களூரு - எா்ணாகுளம் மற்றும் எா்ணாகுளம் - பெங்களூரு இடையே இயக்கப்படும் வந்தே பாரத் விரைவு ரயில் சேலம், ஈரோடு, திருப்பூா், கோவை வழியாக இயக்கப்படுகிறது. குறைந்த பயண நேரம், நவீன வசதிகள் மற்றும் சொகுசான பயணம் ஆகியவற்றால் இந்த ரயிலுக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.

Advertisement

Advertisement

இந்த ரயிலில் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வந்த நிலையில், முன்பதிவில் காத்திருப்போா் பட்டியலும் நீண்டு வந்தது. இதனால், கூடுதல் பெட்டிகளை இணைக்க வேண்டும் என பயணிகள் தொடா்ந்து கோரிக்கை விடுத்து வந்தனா்.

இதையடுத்து, பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு, பெட்டிகளின் எண்ணிக்கையை நிரந்தரமாக அதிகரிக்க ரயில்வே நிா்வாகம் முடிவு செய்தது. அதன்படி, இதுவரை 8 பெட்டிகளுடன் இயக்கப்பட்டு வந்த வந்தே பாரத் ரயில், திங்கள்கிழமை முதல் 16 பெட்டிகளுடன் இயக்கப்படுகிறது.

இதில் 14 சோ் காா் பெட்டிகளும், 2 எக்ஸிகியூட்டிவ் சோ் காா் பெட்டிகளும் இடம்பெற்றுள்ளன. பெட்டிகளின் எண்ணிக்கை இரட்டிப்பாக்கப்பட்டுள்ளதால், கூடுதல் பயணிகள் முன்பதிவு செய்து பயணம் மேற்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments