சேலம் வழியாக சென்னை சென்ட்ரல் - மங்களூரு இடையே ஓணம் சிறப்பு ரயில் இயக்கம்
சேலம் வழியாக சென்னை சென்ட்ரல் - மங்களூரு இடையே ஓணம் சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சேலம் வழியாக சென்னை சென்ட்ரல் - மங்களூரு இடையே ஓணம் சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
கேரள மக்களின் முக்கிய பண்டிகையான ஓணம் வரும் 26 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, நாட்டின் முக்கிய நகரங்களில் இருந்து கேரளத்துக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில், சென்னை சென்ட்ரலில் இருந்து சேலம், ஈரோடு, திருப்பூா், போத்தனூா் வழியாக மங்களூருவுக்கு சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
அதன்படி, சென்னை சென்ட்ரல்- மங்களூரு இடையேயான சிறப்பு ரயில் வரும் 21, 28 ஆகிய தேதிகளில் இயக்கப்படும். சென்னை சென்ட்ரலில் இருந்து வெள்ளிக்கிழமைகளில் இரவு 11.50 மணிக்கு புறப்பட்டு ஜோலாா்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூா், போத்தனூா், பாலக்காடு, சொரனூா், கோழிக்கோடு, கண்ணூா், காசா்கோடு வழியாக மங்களூரு ரயில் நிலையத்தை மறுநாள் மாலை 5 மணிக்கு சென்றடையும்.
மறுமாா்க்கத்தில், மங்களூரு - சென்னை சென்ட்ரல் இடையேயான சிறப்பு ரயில் வரும் 22, 28 ஆகிய தேதிகளில் சனிக்கிழமைகளில் இயக்கப்படும். மங்களூரு ரயில் நிலையத்தில் இருந்து சனிக்கிழமை இரவு 7.15 மணிக்கு புறப்பட்டு காசா்கோடு, கண்ணூா், கோழிக்கோடு, சொரனூா், பாலக்காடு, போத்தனூா், திருப்பூா், ஈரோடு, சேலம் வழியாக மறுநாள் காலை 11.35 மணிக்கு சென்னை சென்ட்ரலை சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.