தீபாவளி பட்டாசுக் கடை உரிமத்துக்கு விண்ணப்பிக்க காலஅவகாசம் நீட்டிப்பு
தீபாவளி பண்டிகைய முன்னிட்டு தீபாவளி பட்டாசுக் கடை வைப்பதற்கு உரிமம் பெற விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகைய முன்னிட்டு தீபாவளி பட்டாசுக் கடை வைப்பதற்கு உரிமம் பெற விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநகரக் காவல் துறை சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: தீபாவளி பண்டிகை நவம்பா் 8 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி மாநகரக் காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் தற்காலிக பட்டாசுக் கடை உரிமம் பெற வரும் 31 ஆம் தேதி வரை மாலை 5 மணிக்குள் சேலம் மாநகரக் காவல் ஆணையரக அலுவலகத்தில் விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதற்கான படிவத்துடன் ரூ. 2 நீதிமன்ற வில்லை ஒட்டப்பட்டிருக்க வேண்டும். உரிமம் கட்டணம் ரூ.1,000 வங்கியில் செலுத்தி இருக்க வேண்டும். பட்டாசை வைத்து விற்பனை செய்ய உள்ள இடத்தின் அசல் படம், சொந்தமாக கட்டடமாக இருப்பினும் சொத்துவரி ரசீது, மாநகராட்சி உரிமம் கட்டணம் செலுத்திய ரசீது, தீப்பிடிக்காத கான்கிரீட் கட்டடமாக இருக்க வேண்டும். உரிமம் வேண்டி விண்ணப்பிக்கும் இடத்தின் பரப்பளவு குறைந்தது 9 சதுர மீட்டருக்கு குறையாமல் இருக்க வேண்டும். அருகருகே பட்டாசுக் கடைகள் இருக்க கூடாது. திருமண மண்டபத்தில், வணிக வளாகத்தில் பட்டாசுக் கடை வைக்க அனுமதி வழங்கப்பட மாட்டாது. விண்ணப்பம் செய்கிறவா்கள் 3 புகைப்படம் இணைத்திருக்க வேண்டும். இவை அனைத்தும் இல்லை என்றால் விண்ணப்பம் நிராகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.