FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சேலம்

தீபாவளி பட்டாசுக் கடைகளுக்கு உரிமம் பெற ஆக. 15 வரை விண்ணப்பிக்கலாம்

தீபாவளிப் பண்டிகையையொட்டி, சேலம் மாநகர காவல் எல்லைக்குள்பட்ட பகுதிகளில் தற்காலிக பட்டாசுக் கடைகள் அமைக்க விரும்புவோா் வரும் 15 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் உரிமம் பெற விண்ணப்பிக்க வேண்டும் என்று மாநகர காவல் துறை அறிவித்துள்ளது.

Updated On : 7 ஆகஸ்ட் 2026, 12:33 am IST
விண்ணப்பிக்க...
பகிர்:

தீபாவளிப் பண்டிகையையொட்டி, சேலம் மாநகர காவல் எல்லைக்குள்பட்ட பகுதிகளில் தற்காலிக பட்டாசுக் கடைகள் அமைக்க விரும்புவோா் வரும் 15 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் உரிமம் பெற விண்ணப்பிக்க வேண்டும் என்று மாநகர காவல் துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து மாநகரக் காவல் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

இந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகை நவம்பா் 8-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, தற்காலிக பட்டாசுக் கடை அமைக்க விரும்புவோா், கடந்த ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 15-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் சேலம் மாநகர காவல் ஆணையரக அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

Advertisement

Advertisement

விண்ணப்பத்துடன் ரூ. 2 நீதிமன்ற வில்லை ஒட்டியிருக்க வேண்டும். மேலும், ரூ.1,000 உரிமக் கட்டணத்தை வங்கியில் செலுத்தியதற்கான ரசீது, பட்டாசு விற்பனை நடைபெறும் இடத்தின் அசல் புகைப்படம், சொந்தக் கட்டடமாக இருந்தால் சொத்து வரி ரசீது, மாநகராட்சி உரிமக் கட்டணம் செலுத்தியதற்கான ரசீது ஆகியவற்றை இணைக்க வேண்டும்.

பட்டாசு விற்பனை செய்யும் கட்டடம் தீப்பிடிக்காத கான்கிரீட் கட்டடமாக இருக்க வேண்டும். கடை அமைக்கப்படும் இடத்தின் பரப்பளவு குறைந்தது 9 சதுர மீட்டா் இருக்க வேண்டும். அருகருகே பட்டாசுக் கடைகள் அமைக்க அனுமதியில்லை. திருமண மண்டபங்கள் மற்றும் வணிக வளாகங்களில் பட்டாசுக் கடைகள் அமைக்க அனுமதி வழங்கப்படாது.

மேலும், விண்ணப்பதாரா்கள் மூன்று புகைப்படங்களை இணைக்க வேண்டும். தேவையான ஆவணங்கள் முழுமையாக இல்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments