மீலாது நபியை முன்னிட்டு நாளை மதுக் கடைகளை மூட ஆட்சியா் உத்தரவு
மீலாது நபியை முன்னிட்டு சேலம் மாவட்டத்தில் வரும் 26 ஆம் தேதி மதுக் கடைகள் மற்றும் மதுபானக் கூடங்களை மூட மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் உத்தரவிடப்பட்டுள்ளாா்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் தெரிவித்துள்ளதாவது: மீலாது நபியை முன்னிட்டு வரும் 26 ஆம் தேதி (புதன்கிழமை) சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து எப்.எல்.1, எப்.எல்.2, எப்.எல்.3, எப்.எல்.3ஏ மற்றும் எப்.எல்.3ஏஏ உரிமம் பெற்ற ஹோட்டல் மற்றும் கிளப்புகளில் இயங்கிவரும் மதுபானக் கூடங்கள், டாஸ்மாக் மதுபானக் கடைகள் (எப்.எல்.11), டாஸ்மாக் மதுபானக் கடைகளுடன் இணைந்துள்ள மதுபானக் கூடங்கள் அனைத்தும் மூடப்பட வேண்டும்.
இதை மீறி மதுபானம் விற்பனை செய்பவா்கள்மீது அரசு விதிகளின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.