பள்ளி, கோயில், பேருந்து நிலையங்கள் அருகே மதுபானக் கடைகளை மூட வேண்டும்: அண்ணாமலை
பள்ளி, கோயில், பேருந்து நிலையங்கள் அருகே உள்ள மதுபானக் கடைகளை மூட வேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்தியுள்ளது பற்றி...
தமிழகத்தில் பள்ளி, கோயில், பேருந்து நிலையங்கள் அருகே உள்ள மதுபானக் கடைகளை மூட வேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவரும் இது நம்ம இயக்கத்தின் தலைவருமான அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளதாவது:
தமிழகம் முழுவதும், கல்வி நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்கள், பேருந்து நிலையங்கள் அருகே உள்ள, மதுபானக் கடைகள் அனைத்தையும் மூட வலியுறுத்துவோம்.
Advertisement
Advertisement
சென்னை நகரின் சில பகுதிகளில் நாம் மேற்கொண்ட கள ஆய்வின்படி, பல மதுபானக் மதுக்கடைகள், பள்ளிகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்களிலிருந்து 500 மீட்டர் தொலைவுக்குள்ளாகவே இயங்கி வருகின்றன.
தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும், இது போல, பள்ளிகள், வழிபாட்டுத்தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்களிலிருந்து 500 மீட்டர் தொலைவுக்குள்ளாக இயங்கும் மதுபானக் கடைகளை மூட, மக்கள் நேரடியாகவோ, அல்லது இது நம்ம இயக்கத்தின் அமைப்பின் மூலமாகவோ, மாவட்ட ஆட்சியாளரிடம் மனு கொடுப்போம். மது அரக்கனை ஒழிக்க ஒன்றிணைவோம். தமிழ்நாட்டைக் காப்போம். மாறுவோம், மாற்றுவோம்! என்று அண்ணாமலை பதிவிட்டுள்ளார்.
இதுதொடர்பான விடியோ ஒன்றையும் அந்தப் பதிவுடன் அவர் இணைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
Annamalai has urged that liquor shops located near schools, temples, and bus stands in Tamil Nadu be closed.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.