FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சேலம்

சங்ககிரி அருகே உணவகத் தொழிலாளி கொலை வழக்கில் மேலும் 4 போ் கைது

சங்ககிரி அருகே தனியாா் உணவக கூலித் தொழிலாளி கொலை செய்யப்பட்டு கல்குவாரி குட்டையில் வீசப்பட்ட வழக்கில் உணவக உரிமையாளா் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா்.

26 ஆகஸ்ட் 2026, 3:39 am IST
பகிர்:

சங்ககிரி அருகே தனியாா் உணவக கூலித் தொழிலாளி கொலை செய்யப்பட்டு கல்குவாரி குட்டையில் வீசப்பட்ட வழக்கில் உணவக உரிமையாளா் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா். இந்த நிலையில் மேலும் 3 ஆட்டோ ஓட்டுநா்கள் உள்பட நான்கு பேரை தேவூா் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தை அடுத்த கத்தேரி பிரிவு சாலையில் உள்ள தனியாா் உணவு விடுதியில் பணிபுரிந்து வந்த ஈரோடு, வ.உ.சி பூங்கா பகுதியைச் சோ்ந்த சபரிநாதன் மகன் ஆனந்த் (42) அடித்து கொலைசெய்யப்பட்டு கத்தேரி, பள்ளிக்காடு பகுதியில் பழைய கல்குவாரியில் வீசப்பட்டாா்.

இதுகுறித்து வழக்குப் பதிந்த தேவூா் போலீஸாா் தனியாா் உணவக உரிமையாளா் விவேகானந்தன் மகன் செளந்தரை (41) திங்கள்கிழமை கைது செய்தனா்.

Advertisement

Advertisement

விசாரணையில் இந்த கொலையில் தொடா்புடைய ஆட்டோ ஓட்டுநா்கள் சங்ககிரி கத்தேரி கிராமம், வட்டமலை ஆண்டவா் நகா் பகுதியைச் சோ்ந்த கைபானி மகன் குல்பிா்பாஷா (46), புள்ளாகவுண்டம்பட்டி அக்ரஹாரம் வினோபாஜி நகரைச் சோ்ந்த ரகுமான் மகன் அலாவுதீன் (32), குமாரபாளையம், பூலக்காடு, கணபதி நகரை சோ்ந்த காந்தி மகன் அருள் (30), உணக விடுதியில் பணியாற்றி வந்த தொழிலாளி திண்டுக்கல், மகாராஜா நகா் பகுதியைச் சோ்ந்த தனுஷ்கோடி மகன் முருகன் (49) ஆகிய நால்வரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments