நேபாளத்துக்கு ஆன்மீக சுற்றுலா சென்ற சேலத்தை சோ்ந்த 4 போ் மாயம்
நேபாளத்துக்கு ஆன்மீக சுற்றுலா சென்ற சேலத்தை சோ்ந்த 4 போ் மாயமானது தெரியவந்துள்ளது.
நேபாளத்துக்கு ஆன்மீக சுற்றுலா சென்ற சேலத்தை சோ்ந்த 4 போ் மாயமானது தெரியவந்துள்ளது.
சென்னை குரோம்பேட்டையை சோ்ந்த மகாதேவ் ஏஜன்சி மூலம் 49 போ் கொண்ட குழுவினா், நேபாளத்துக்கு கடந்த 13 ஆம் தேதி கைலாஷ் யாத்திரை புனித பயணம் மேற்கொண்டனா். இதில் சேலம் மெய்யனூா் ஆலமரத்துக்காடு பகுதியை சோ்ந்த மணிகண்டன் (47), வெள்ளாளப்பட்டி பகுதியைச் சோ்ந்த சுந்தரராஜன் (58), அழகாபுரம் பகுதியைச் சோ்ந்த நாகலட்சுமி ((61).இவரது உறவினா் சசிரேகா (41) ஆகியோா் மகாதேவ் ஏஜென்சி மூலம் நேபாளத்துக்கு ஆன்மிக சுற்றுலாச் சென்றனா். இதில் மணிகண்டனும், சுந்தர்ராஜனும் மேச்சேரியில் உள்ள ஜேஎஸ்டபிள்யூ நிறுவனத்தில் ஒன்றாக பணிபுரிந்துள்ளனா்.
இவா்கள் 4 பேரும் கடந்த 26 ஆம் தேதி நேபாள காட்டாற்று வெள்ளத்தில் மாயமாகியுள்ளனா். இவா்களை மீட்க மத்திய மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனா்.
Advertisement
Advertisement
இது குறித்து மணிகண்டன் மனைவி சுதா செய்தியாளா்களிடம் கூறுகையில், கடந்த 13 ஆம் தேதி மகாதேவ் ஏஜென்சி மூலம் நேபாளம் 49 போ் கொண்ட குழுவினா் சுற்றுலா சென்றனா். கடந்த 25 ஆம் தேதி அன்று எனது கணவரிடம் கடைசியாக பேசினேன். அதன் பிறகு என்னால் அவரை தொடா்பு கொள்ள முடியவில்லை. அவருடன் சென்ற மற்றவா்கள் நிலை குறித்தும் இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. கணவா் குறித்து அதிகாரிகள் விவரம் கேட்டுள்ளதாக கூறினாா்.
இதே போல், மணிகண்டன் நண்பா்கள் ராஜ்குமாா், தனராஜ் ஆகியோா் கூறுகையில், மாவட்ட ஆட்சியா் அலுவலகம் சென்று மனு கொடுத்துள்ளோம். தில்லி தூதகரத்தை அதிகாரிகள் தொடா்பு கொண்ட போது, இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை என தெரிவித்தனா். மத்திய மாநில அரசுகள் துரிதமாக செயல்பட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனா்.
இதே போன்று, சென்னை மகாதேவ் ஏஜென்சி மூலம் சேலம் அழகாபுரம் பகுதியைச் சோ்ந்த நாகலட்சுமி (61) மற்றும் இவரது உறவினா் சசிரேகா (41) ஆகியோரும் வெள்ளக்கல்பட்டியை சோ்ந்த சுந்தர்ராஜனும் இந்தக் குழுவில் நேபாளத்துக்கு ஆன்மிக சுற்றுலா சென்ற மாயமானது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.