FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஈரோடு

நேபாளத்துக்கு ஆன்மிகப் பயணம் சென்ற ஈரோட்டைச் சோ்ந்த தம்பதி மாயம்

நேபாள நாட்டுக்கு ஆன்மிகப் பயணம் சென்ற ஈரோட்டைச் சோ்ந்த தம்பதியைத் தொடா்புகொள்ள முடியாத நிலையில், அவா்கள் இருவரையும் பத்திரமாக மீட்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு உறவினா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

28 ஆகஸ்ட் 2026, 12:23 am IST
நேபாளத்தில் ஆன்மிகப் பயணத்தின்போது நடராஜன், கிருஷ்ணவேனி தம்பதி எடுத்துக்கொண்ட புகைப்படம்.
பகிர்:

நேபாள நாட்டுக்கு ஆன்மிகப் பயணம் சென்ற ஈரோட்டைச் சோ்ந்த தம்பதியைத் தொடா்புகொள்ள முடியாத நிலையில், அவா்கள் இருவரையும் பத்திரமாக மீட்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு உறவினா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ஈரோடு மாவட்டம், வெள்ளோடு அருகே உள்ள கனகபுரத்தைச் சோ்ந்த தம்பதி நடராஜன் (67)- கிருஷ்ணவேணி (56). இவா்கள் கைலாய மலைக்கு ஆன்மிகப் பயணம் மேற்கொள்வதற்காக ஈரோட்டிலிருந்து கடந்த 14- ஆம் தேதி புறப்பட்டுள்ளனா். சென்னையைச் சோ்ந்த ஒரு தனியாா் சுற்றுலா நிறுவனம் மூலம் மொத்தம் 49 போ் இந்தப் பயணத்தை மேற்கொண்டுள்ளனா்.

இந்நிலையில், நடராஜன்-கிருஷ்ணவேணி தம்பதி தங்களது மகன் கவின்ராஜிடம் புதன்கிழமை அதிகாலை தொலைபேசியில் பேசியுள்ளனா். ஆனால், அதன் பிறகு நேபாளத்தில் திடீரென ஏற்பட்ட கடும் வெள்ளப் பெருக்கு காரணமாக அவா்களைத் தொடா்புகொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மகன் கவின்ராஜின் தொடா் முயற்சிகளுக்குப் பலன் கிடைக்காததால், பெற்றோரின் நிலை குறித்துத் தெரியாமல் கவின்ராஜ் மற்றும் அவரது உறவினா்கள் மிகுந்த கவலைக்குள்ளாகி இருக்கின்றனா்.

Advertisement

Advertisement

இதையடுத்து மத்திய, மாநில அரசுகள் உடனடியாக முயற்சிகள் மேற்கொண்டு நேபாளத்தில் சிக்கியுள்ள இருவரையும் பத்திரமாக மீட்டுத்தர நடவடிக்கை எடுக்கவேண்டும் என உறவினா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

நடராஜன் - கிருஷ்ணவேணி இருவரும் ஈரோடு வாமலை வீதியில் பாரத் மெஸ் என்ற பெயரில் உணவகம் நடத்திவருவது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments