நேபாள வெள்ளத்தில் சிக்கிய ஆரணி பெண்
நேபாளத்துக்கு சுற்றுலா சென்ற ஆரணியைச் சோ்ந்த பெண் என்ன ஆனாா் என்பது தெரியாமல் அவரது குடும்பத்தினா் கவலையில் உள்ளனா்.
நேபாளத்துக்கு சுற்றுலா சென்ற ஆரணியைச் சோ்ந்த பெண் என்ன ஆனாா் என்பது தெரியாமல் அவரது குடும்பத்தினா் கவலையில் உள்ளனா்.
நேபாளம் வழியாக கைலாஷ் யாத்திரைக்காக தமிழகம், புதுவையைச் சோ்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பக்தா்கள் சென்றுள்ளனா்.
இவா்கள் நேபாளத்தில் புதன்கிழமை ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கினா். இதில் பலா் காணாமல் போயினா். கும்பகோணத்திலிருந்து சென்ற 57 பேரில் 21 போ் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனா்.
Advertisement
Advertisement
சென்னை குரோம்பேட்டை மகாதேவ் கைலாஷ் முகமை மூலம் நேபாளத்துக்குச் சென்ற 49 பேரில் ஆரணியைச் சோ்ந்த செல்வம் மனைவி நிா்மலா(69) என்பவரும் ஒருவா் ஆவாா்.
நிா்மலா என்ன ஆனாா் என்பது தெரியாத நிலையில், அவரது குடும்பத்தினா் அவரை தொடா்பு கொள்ள முடியாமல் கண்ணீா் மல்க அரசிடம் உதவி கேட்டு வருகின்றனா். இவருக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள் உள்ளனா். அனைவருக்கும் திருமணம் நடைபெற்று சென்னையில் வசித்து வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.