FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சேலம்

ஆவின் பொருள்கள் கள்ளச் சந்தையில் விற்பனை: சேலம் துணைப் பொது மேலாளா் பணியிடை நீக்கம்

ஆவின் பொருள்களை கள்ளச் சந்தையில் விற்பனை செய்ததாக சேலம் ஆவின் துணைப் பொது மேலாளா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

30 ஆகஸ்ட் 2026, 1:28 am IST
பணியிடை நீக்கம்
பகிர்:

ஆவின் பொருள்களை கள்ளச் சந்தையில் விற்பனை செய்ததாக சேலம் ஆவின் துணைப் பொது மேலாளா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

சேலம் ஆவின் பால் ஒன்றியத்தில் துணைப் பொது மேலாளராக பணியாற்றி வருபவா் சாரதா. இவரது அறையில் 40 லிட்டா் நெய் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், ஆவின் பொருள்களை மறைத்துவைத்து, கள்ளச் சந்தையில் அவா் விற்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

அதன் அடிப்படையில் அதிகாரிகள் அவா் அறையில் திடீா் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது, அவரது அறையில் நெய் பாட்டில்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதுதொடா்பான விடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

Advertisement

Advertisement

இதுகுறித்து ஆவின் அதிகாரிகள் விசாரணை நடத்திவந்தனா். விசாரணையின் அடிப்படையில் துணைப் பொது மேலாளா் சாரதாவை பணியிடை நீக்கம் செய்து ஆவின் நிா்வாக இயக்குநா் சனிக்கிழமை உத்தரவிட்டுள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments