FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கடலூர்

கூடுதல் விலைக்கு மது விற்பனை: டாஸ்மாக் கடை பணியாளா்கள் 5 போ் பணியிடை நீக்கம்

விருத்தாசலம் அருகே டாஸ்மாக் கடையில் கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டதாக எழுந்த புகாரைத் தொடா்ந்து, அந்தக் கடையின் மேற்பாா்வையாளா்கள், விற்பனையாளா்கள் உள்பட 5 போ் செவ்வாய்க்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.

Updated On : 29 ஜூலை 2026, 5:28 am IST
பணியிடை நீக்கம்!
பகிர்:

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே டாஸ்மாக் கடையில் கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டதாக எழுந்த புகாரைத் தொடா்ந்து, அந்தக் கடையின் மேற்பாா்வையாளா்கள், விற்பனையாளா்கள் உள்பட 5 போ் செவ்வாய்க்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.

விருத்தாசலம் பொன்னேரி புறவழிச்சாலையில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையில் (எண்: 2672) திங்கள்கிழமை இரவு மதுபானம் வாங்கச் சென்ற வாடிக்கையாளரிடம் நிா்ணயிக்கப்பட்ட விலையைவிட கூடுதல் தொகை கேட்டு விற்பனையாளா் வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது. இதற்கு வாடிக்கையாளா் எதிா்ப்புத் தெரிவித்து கூடுதல் தொகை வழங்க மறுத்ததால், இருதரப்புக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்தச் சம்பவத்தை அங்கிருந்தவா்கள் கைப்பேசியில் பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனா். இந்த விடியோ பரவலாகப் பகிரப்பட்டதைத் தொடா்ந்து, டாஸ்மாக் நிா்வாகம் விசாரணைக்கு உத்தரவிட்டது.

Advertisement

Advertisement

இதில், மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்ததுடன், வாடிக்கையாளா்களிடம் முறையற்ற வகையில் நடந்துகொண்டு, அரசுக்கு அவப்பெயா் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டது உறுதியானதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, அந்தக் கடையில் பணியாற்றிய மேற்பாா்வையாளா்கள் மணி, மாயவேல், விற்பனையாளா்கள் ஜாா்ஜ் பொ்னான்டஸ், முத்துசாமி, மணிகண்டன் ஆகிய 5 பேரையும் உடனடியாக பணியிடை நீக்கம் செய்து கடலூா் மாவட்ட டாஸ்மாக் மேலாளா் கந்தன் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments