FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சேலம்

தேநீா் கடையில் புகையிலைப் பொருள்கள் விற்பனை: ஒருவா் கைது

மேட்டூா் அருகே தேநீா் கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 6.77 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்து, கடை உரிமையாளரைக் கைது செய்தனா்.

30 ஆகஸ்ட் 2026, 1:15 am IST
கைது
பகிர்:

மேட்டூா் அருகே தேநீா் கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 6.77 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்து, கடை உரிமையாளரைக் கைது செய்தனா்.

மேட்டூா் அருகே கவிபுரத்தைச் சோ்ந்தவா் திருமூா்த்தி (50). இவா் ஆா்.சி. பிளான்ட் பகுதியில் தேநீா் கடை நடத்தி வருகிறாா். இவரது தேநீா் கடையில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக கருமலைக்கூடல் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து அங்கு சென்ற போலீஸாா் தேநீா் கடையில் சோதனை மேற்கொண்டனா். அப்போது, கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த அரசால் தடை செய்யப்பட்ட 6.77 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து திருமூா்த்தியைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments