FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கன்னியாகுமரி

புகையிலை விற்றவா் கைது

கொல்லங்கோடு அருகே பெட்டிக் கடையில் புகையிலைப் பொருள்களை சட்ட விரோதமாக விற்பனை செய்தவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

Updated On : 20 ஆகஸ்ட் 2026, 5:00 am IST
- பிரதிப் படம்
பகிர்:

கொல்லங்கோடு அருகே பெட்டிக் கடையில் புகையிலைப் பொருள்களை சட்ட விரோதமாக விற்பனை செய்தவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

மாா்த்தாண்டம் சரக காவல் துணைக் கண்காணிப்பாளா் சங்கா் கணேஷ் தலைமையில் கொல்லங்கோடு போலீஸாா் ஊரம்பு சந்திப்பு, அதையொட்டிய பகுதி பெட்டிக் கடைகளில் சோதனை செய்தனா். இதில், செங்கவிளையைச் சோ்ந்த முருகன் (55) பெட்டிக் கடையில் புகையிலைப் பொருள்கள் பதுக்கி வைத்திருந்தது கண்டறியப்பட்டது.

அங்கிருந்த 113 பொட்டலம் புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்து, முருகனை கைது செய்தனா். இதுகுறித்து கொல்லங்கோடு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments