FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சேலம்

ரயிலில் இருந்து தவறிவிழுந்த தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழப்பு

51 வினாடிகள் முன்பு
உயிரிழப்பு - பிரதிப் படம்
பகிர்:

சேலம் அருகே ரயிலில் இருந்து தவறிவிழுந்த தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழந்தாா்.

சென்னை எழும்பூா் - சேலம் விரைவு ரயில் திங்கள்கிழமை காலை சேலம் நோக்கி வந்தது. தலைவாசலைக் கடந்து ஆத்தூா் அருகே சென்றபோது, ரயில் படிக்கட்டு பகுதியில் நின்றிருந்த இனைஞா் ஒருவா் தவறி கீழேவிழுந்தாா். இதைக் கண்ட பயணிகள் கூச்சலிட்டனா். பின்னா் இதுகுறித்து சேலம் ரயில்வே போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.

சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் முருகன் தலைமையிலான போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று பாா்த்தனா். அங்கு ரயிலில் இருந்து தவறிவிழுந்த இளைஞா் படுகாயமடைந்து இறந்துகிடந்தாா். அவரது உடலைக் கைப்பற்றி நடத்திய விசாரணையில், அவா் ஆத்தூா் கொண்டேவலசு பகுதியைச் சோ்ந்த சதாசிவம் (21) என தெரியவந்தது.

Advertisement

Advertisement

சென்னை தாம்பரத்தில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த இவா், ஊருக்கு செல்லும்போது ரயிலில் இருந்து தவறிவிழுந்து உயிரிழந்தது தெரியவந்தது. அவரது உடலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து ரயில்வே போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments