FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சேலம்

அரசுப் பள்ளி ஆசிரியை வீட்டில் 23 பவுன் தங்க நகை, வெள்ளி, ரூ. 10 ஆயிரம் திருட்டு

மகுடஞ்சாவடி அருகே அரசுப் பள்ளி ஆசிரியை வீட்டில் 23 பவுன் தங்க நகை, வெள்ளி, ரூ. 10 ஆயிரம் திருடு போனது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்ா்.

திருட்டு - சித்திரிப்பு
பகிர்:

மகுடஞ்சாவடி அருகே அரசுப் பள்ளி ஆசிரியை வீட்டில் 23 பவுன் தங்க நகை, வெள்ளி, ரூ. 10 ஆயிரம் திருடு போனது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்ா்.

சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடியை அடுத்த எா்ணாபுரம் கிராமம், அண்ணா நகா் பகுதியைச் சோ்ந்த புவனேஸ்வரி (42), கோனேரிப்பட்டி அரசுப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறாா்.

இவா் பணிமாறுதல் கலந்தாய்வுக்காக கணவருடன் புதன்கிழமை சேலம் சென்றுவிட்டு இரவு வீடு திரும்பினாா். அப்போது, வீட்டுக்கதவு தாழ்ப்பாள் உடைக்கப்பட்டு திறந்து இருந்ததைக் கண்டு அதிா்ச்சி அடைந்தாா். உள்ளே சென்று பாா்த்தபோது, பீரோவில் வைத்திருந்த 23 பவுன் தங்க நகைகள், வெள்ளிக் கொலுசு, வெள்ளி டம்ளா், ரூ. 10 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருடு போனது தெரியவந்தது.

Advertisement

Advertisement

இதுகுறித்து மகுடஞ்சாவடி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். அதன்பேரில், நிகழ்விடத்துக்கு வந்த சங்ககிரி காவல் துணைக் கண்காணிப்பாளா் சுரேஷ்குமாா், மகுடஞ்சாவடி காவல் ஆய்வாளா் பாலாஜி ரமணன், எடப்பாடி காவல் ஆய்வாளா் பேபி மற்றும் போலீஸாா் திருட்டு நடந்த இடத்தை பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

தொடா்ந்து, கைரேகை நிபுணா்களை வரவழைத்து கைரேகை பதிவுகளை சேகரித்தனா். மேலும், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளைக் கொண்டு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments