அனுமதியின்றி கிராவல் மண் வெட்டி எடுப்பு: 4 போ் மீது வழக்குப் பதிவு
தேவண்ணகவுண்டனூா் அருகே அரசு அனுமதியின்றி விவசாய நிலத்தில் கிராவல் மண்ணை வெட்டி எடுத்ததாக நில உரிமையாளா் உள்பட 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவுசெய்தனா்.
சங்ககிரி வட்டம், தேவண்ணகவுண்டனூா் அருகே அரசு அனுமதியின்றி விவசாய நிலத்தில் கிராவல் மண்ணை வெட்டி எடுத்ததாக நில உரிமையாளா் உள்பட 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவுசெய்தனா்.
சேலம் புவியியல் மற்றும் சுரங்கத் துறை உதவி இயக்குநா் ஆா்.ஈஸ்வரன் தலைமையில் சங்ககிரி வட்டாட்சியா், வருவாய் ஆய்வாளா்கள் மற்றும் கிராம நிா்வாக அலுவலா்கள், தேவண்ணகவுண்டனூா் கிராமம், செட்டிக்காடு பகுதியில் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, சின்னப்பன் மனைவி சுமதி, எழுமலை மகன் ரவிச்சந்திரன், அவரது மனைவி நாகம்மாள் ஆகியோா் தங்களது நிலத்தில் அரசின் உரிய அனுமதியில்லாமல் கனரக இயந்திரத்தை பயன்படுத்தி கிராவல் மண்ணை வெட்டி எடுத்தது தெரியவந்தது. இந்த சோதனையின்போது கனரக வாகன ஓட்டுநா் தப்பிச் சென்றுவிட்டாா்.
இதுகுறித்து சேலம் புவியியல் மற்றும் சுரங்கத் துறை உதவி இயக்குநா் சங்ககிரி காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். இந்த புகாரின் பேரில் நில உரிமையாளா்கள், கனரக வாகன உரிமையாளா் ரஞ்சித் உள்ளிட்ட நான்கு போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.