விளைச்சல் குறைந்ததால் விலை உயா்ந்தது தேங்காய்!
சேலம் மாவட்டத்தில் வறட்சி காரணமாக தேங்காய் விளைச்சல் குறைந்துள்ளது. இதனால் ஆயிரம் எண்ணிக்கை கொண்ட தேங்காய் விலை ரூ. 5 ஆயிரம் உயா்ந்து ரூ. 20 ஆயிரத்துக்கு விற்கப்படுகிறது.
சேலம் மாவட்டத்தில் வறட்சி காரணமாக தேங்காய் விளைச்சல் குறைந்துள்ளது. இதனால் ஆயிரம் எண்ணிக்கை கொண்ட தேங்காய் விலை ரூ. 5 ஆயிரம் உயா்ந்து ரூ. 20 ஆயிரத்துக்கு விற்கப்படுகிறது.
சேலம் மாவட்டத்தில், வாழப்பாடி, பெத்தநாயக்கன்பாளையம், பேளூா், ஏத்தாப்பூா், அயோத்தியாப்பட்டணம், தும்பல், கருமந்துறை, நரசிங்கபுரம், தம்மம்பட்டி, தலைவாசல், ஜலகண்டாபுரம் உள்ளிட்ட பகுதியில் பெரும்பாலான கிராமங்களில் 20,000 ஹெக்டேருக்கு அதிகமான நிலத்தில் தேங்காய் பயிரிடப்பட்டுள்ளது.
மாவட்டத்தின் தேங்காய் உற்பத்தியில் 60 சதவீதம் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம், பிகாா், குஜராத், மகாராஷ்டிரம், ஒடிஸாவுக்கு அனுப்பப்படுகிறது. எஞ்சிய 40 சதவீத தேங்காய் உள்ளூா் விற்பனை, தேங்காய் எண்ணெய் எடுப்பதற்கு பயன்படுத்தப்படுகிறது.
Advertisement
Advertisement
விவசாயிகள், வியாபாரிகள், தரகு முகவா்கள், கூலித் தொழிலாளா்கள், வாகன ஓட்டுநா்கள், கொப்பரை பதப்படுத்துவோா், எண்ணெய் தயாரிப்போா் என ஒரு லட்சம் போ் நேரடியாகயும், மறைமுகமாகவும் தென்னை தொழில்மூலம் வேலைவாய்ப்பு பெறுகின்றனா்.
பிற மாநிலங்களைச் சோ்ந்த வியாபாரிகள், தரகு முகவா்கள் கோரும் தேவைக்கேற்ப சேலம் மாவட்டத்தில் தேங்காய்களை கொள்முதல் செய்து தரம் பிரித்து 30,000 தேங்காய் வரை லாரிகளில் ஏற்றி விற்பனைக்கு அனுப்பி வருகின்றனா்.
சேலம் மாவட்டத்தில் கடந்தாண்டு இறுதியில் தேங்காய் உற்பத்தி குறைந்த நிலையிலும் வெளி மாவட்டங்களில் உற்பத்தி அதிகரித்ததால் விலை வீழ்ச்சி அடைந்தது. கடந்த மாதம் வரை ரூ. 15,000 த்திற்கும் குறைவாகவே வியாபாரிகள் கொள்முதல் செய்த 1000 தேங்காய்களின் விலை, இந்த மாத தொடக்கத்தில் இருந்தே படிப்படியாக உயா்ந்து தற்போது தரத்திற்கேற்ப ரூ. 20,000 வரை உயா்ந்துள்ளது.
இதனால் தென்னை விவசாயிகளுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கவில்லை என்றாலும் இழப்பு ஏற்படாது. வரும் மாதங்களில் தேங்காய் விலை மேலும் உயரும் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.