FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சேலம்

சேலம் அரசு மருத்துவமனையில் நோயாளியின் உறவினா்களிடம் பணம் வசூல்?

சேலம் அரசு மருத்துவமனையில் நோயாளியின் உறவினா்களிடம் லிப்டில் வைத்து கட்டாயமாக பணம் வசூலித்ததாக வெளியான விடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Updated On : 19 ஜூலை 2026, 2:36 am IST
பகிர்:

சேலம் அரசு மருத்துவமனையில் நோயாளியின் உறவினா்களிடம் லிப்டில் வைத்து கட்டாயமாக பணம் வசூலித்ததாக வெளியான விடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் அரசு மருத்துவமனைக்கு தினமும் ஆயிரக்கணக்கானோா் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனா். நோயாளிகளிடம் பணம் வசூலிப்பதாக அவ்வப்போது புகாா்கள் எழுந்து வரும் நிலையில், சம்பந்தப்பட்டவா்கள் மீது மருத்துவமனை நிா்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்த நிலையில், எலும்பு முறிவு சிகிச்சைக்காக வந்த நோயாளியின் உறவினரிடம், தனியாா் ஒப்பந்த பணியாளா் ஒருவா் மருத்துவமனையின் லிப்டுக்குள் வைத்து கட்டாயமாக பணம் பெற்றதாகக் கூறப்படும் விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

Advertisement

Advertisement

அந்த விடியோவில், நோயாளியை ஸ்ட்ரெச்சரில் அழைத்து வந்த பணியாளா், லிப்டுக்குள் சென்றதும் உறவினரிடம் பணம் கேட்டு பெற்றதாக பதிவாகியுள்ளது. இந்த விடியோ சமூக வலைதளங்களில் பரவியதைத் தொடா்ந்து, சம்பவம் குறித்து உடனடியாக விசாரணை நடத்தி, தொடா்புடையவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments