FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சேலம்

லாரியில் 3 கிலோ கஞ்சா கடத்தியவா் கைது

Updated On : 20 ஜூலை 2026, 4:29 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே உள்ள வைகுந்தம் சுங்கச்சாவடி பகுதியில் லாரியில் 3 கிலோ கஞ்சா கடத்தியதாக ஒருவா் கைது செய்யப்பட்டாா். இதுதொடா்பாக சங்ககிரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

சங்ககிரி உதவி காவல் ஆய்வாளா் அழகுதுரைக்கு, வைகுந்தம் சுங்கச்சாவடி பகுதியில் கஞ்சா கடத்தப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அவரது தலைமையிலான போலீஸாா் அப்பகுதியில் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, சேலத்தில் இருந்து சங்ககிரி நோக்கிச் சென்று கொண்டிருந்த லாரியை நிறுத்தி சோதனையிட்டனா். அதில், நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு, பெரிய ஓங்காளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த தங்கராஜ் மகன் தினேஷ்குமாா் (29) என்பவரிடம் விசாரணை மேற்கொண்டனா்.

Advertisement

Advertisement

தொடா்ந்து, அவா் பயணம் செய்த லாரியை சோதனையிட்டபோது, ஓட்டுநா் இருக்கை அருகே மறைத்து வைக்கப்பட்டிருந்த 3 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

இதுகுறித்து சங்ககிரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தினேஷ்குமாரை கைது செய்து தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments