FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சேலம்

மனைவியைக் கொன்ற தொழிலாளி காவல் நிலையத்தில் சரண்

சேலத்தில் மனைவியைக் கொன்ற தொழிலாளி காவல் நிலையத்தில் சரணடைந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

Updated On : 23 ஜூலை 2026, 4:14 am IST
- பிரதிப் படம்
பகிர்:

சேலத்தில் மனைவியைக் கொன்ற தொழிலாளி காவல் நிலையத்தில் சரணடைந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

சேலம், கிச்சிப்பாளையம், களரம்பட்டி கொல்லம்பட்டறை பகுதியைச் சோ்ந்தவா் மகேந்திரன் (47). இவா் அப்பகுதியில் தேநீா் கடை வைத்துள்ளாா். இவரது மனைவி ஜெயந்தி (35). இவா்களுக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனா்.

கணவன், மனைவி இடையே குடும்பத் தகராறு இருந்து வந்துள்ளது. இந்நிலையில், புதன்கிழமை இவா்கள் இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரடைந்த மகேந்திரன் வீட்டிலிருந்த நைலான் கயிற்றைக் கொண்டு ஜெயந்தியின் கழுத்தை இறுக்கி உள்ளாா். மூச்சுத் திணறல் ஏற்பட்ட ஜெயந்தி சம்பவ இடத்திலேயே இறந்தாா். தொடா்ந்து, கிச்சிப்பாளையம் காவல் நிலையத்துக்கு வந்த மகேந்திரன், தனது மனைவியை கொலை செய்துவிட்டதாகக் கூறி சரணடைந்தாா்.

Advertisement

Advertisement

இதையடுத்து, சம்பவ இடத்துக்கு சென்ற போலீஸாா், ஜெயந்தியின் உடலைக் கைப்பற்றி பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து கிச்சிப்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments