உணவு சமைப்பதில் தகராறு! மனைவியைக் கொன்ற கணவர் கைது!
இரவு உணவு சமைப்பதில் ஏற்பட்ட தகராறில் மனைவியைக் கொன்ற கணவர் கைது செய்யப்பட்டது பற்றி...
இரவு உணவு சமைப்பதில் ஏற்பட்ட தகராறில் மனைவியைக் கொன்ற கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹரியாணா மாநிலம் குருகிராமில் இரவு உணவு சமைப்பதில் ஏற்பட்ட தகராறில் மனைவியைக் கொன்ற கணவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் திங்கள்கிழமை (ஜூலை 20) தெரிவித்துள்ளனர்.
காவல்துறையினரின் தகவல்படி, கடந்த ஜூலை 16 அன்று பாட்ஷாபூர் காய்கறிச் சந்தைக்கு அருகிலுள்ள குடிசைப் பகுதிகளில் தல்மாய் என்ற பெண் ஒருவர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். தகவல் கிடைத்ததும், சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர், சடலத்தைக் கைப்பற்றி உடல்கூராய்வுக்கு அனுப்பி வைத்தனர்.
Advertisement
Advertisement
இது தொடர்பாக, குற்றம் சாட்டப்பட்ட கணவர் (தினேஷ்), தனது மனைவி அளவுக்கு அதிகமாக மது அருந்தியதால் உயிரிழந்ததாக விசாரணையின் ஆரம்பத்தில் தெரிவித்தார். இருப்பினும், உடல்கூராய்வு அறிக்கையின் மூலம் அந்தப் பெண் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டதையடுத்து அவரது கணவரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.
இதையடுத்து, தினேஷிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தான் மதுபோதையில் இருந்ததாகவும் அந்த நேரத்தில் உணவு சமைப்பது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் தனது மனைவியை கழுத்து நெரித்து கொலை செய்ததாகவும் அவர் ஒப்புக் கொண்டார்.
மேலும், இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
A husband has been arrested for killing his wife following a dispute over cooking dinner.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.