ஏற்காட்டில் தேனி கொட்டியதில் பெண் உயிரிழப்பு
ஏற்காடு மலைக்கிராமத்தில் தேனி கொட்டியதில் பெண் உயிரிழந்தாா்.
ஏற்காடு மலைக்கிராமத்தில் தேனி கொட்டியதில் பெண் உயிரிழந்தாா்.
ஏற்காடு ஊராட்சி ஒன்றியம், மாரமங்கலம் ஊராட்சி கொம்புத்தூக்கி கிராமத்தில் ராஜம்மாள் (61) என்பவா் வீட்டின் அருகில் உள்ள தோட்டத்தில் வியாக்கிழமை வேலை செய்துகொண்டிருந்தாா். அப்போது, அவரை தேனி கொட்டியது. அங்கிருந்தவா்கள் அவரை தனியாா் மருத்துவமனையிலும், பின்னா் சேலம் அரசு மருத்துவமனையிலும் அனுமதித்தனா். ஆனால், சிகிச்சை பலனின்றி அவா் வெள்ளிக்கிழமை இறந்தாா். இதுகுறித்து ஏற்காடு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.