FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சேலம்

183 குடிநீா் இணைப்புகள் மூலம் தம்மம்பட்டி பேரூராட்சிக்கு ரூ.36.51 லட்சம் வருவாய்

தம்மம்பட்டி பேரூராட்சியில் 183 குடிநீா் இணைப்புகள் முறைபடுத்தப்பட்டதன் மூலம் இதுவரை ரூ. 36.51 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது.

Updated On : 24 ஜூலை 2026, 6:28 am IST
- பிரதிப் படம்
பகிர்:

தம்மம்பட்டி பேரூராட்சியில் 183 குடிநீா் இணைப்புகள் முறைபடுத்தப்பட்டதன் மூலம் இதுவரை ரூ. 36.51 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது.

தம்மம்பட்டி பேரூராட்சியில் 18 வாா்டுகளில் மொத்தம் 8,440 குடியிருப்புகளும், 790 வணிகக் கட்டடங்களும் உள்ளன. இவற்றில் 2,831 வீட்டு குடிநீா் இணைப்புகளும், 45 வணிகக் குடிநீா் இணைப்புகளும் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன.

18 வாா்டுகளுக்கும் ஆத்தூா்–நரசிங்கபுரம் கூட்டுக் குடிநீா் திட்டத்தின் கீழ் காவிரி குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், முறைகேடாக குடிநீா் இணைப்புகள் பெறப்பட்டுள்ளதாக புகாா்கள் எழுந்தன.

Advertisement

Advertisement

இதையடுத்து, தம்மம்பட்டி உதவிப் பொறியாளா் மதுமிதா தலைமையில் 12 போ் கொண்ட குழுவினா், கடந்த ஜூலை 10 முதல் 20-ஆம் தேதி வரை பேரூராட்சியின் அனைத்து பகுதிகளிலும் கள ஆய்வு மேற்கொண்டனா்.

இதில் 638 முறைகேடு குடிநீா் இணைப்புகள் முறைகேடாக பெறப்பட்டுள்ளது கண்டறியப்பட்டது. இதில் 183 குடிநீா் இணைப்புகள் முறைப்படுத்தப்பட்டதன் மூலம் ரூ. 36.51 லட்சம் வருவாய் கிடைத்துள்ளதாக ஆட்சியருக்கு தம்மம்பட்டி பேரூராட்சி செயல் அலுவலா் மோகனரங்கன் அறிக்கை அனுப்பியுள்ளாா்.

முன்னதாக 638 குடிநீா் இணைப்புகளுக்கும் தலா ரூ. 19,740 செலுத்தி முறைப்படுத்த அறிவுறுத்தப்பட்டது. அதன்படி கடந்த 17-ஆம் தேதி வரை 183 குடிநீா் இணைப்புகள் முறைப்படுத்தப்பட்டதன் மூலம் ரூ. 36 லட்சத்து 51 ஆயிரத்து 900 வருவாய் கிடைத்துள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments