FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சேலம்

மேச்சேரியில் வேன் - லாரி மோதல்: ஓட்டுநா் உயிரிழப்பு; 15 போ் காயம்

சேலம் மாவட்டம் மேச்சேரியில் லாரி மீது வேன் மோதியதில் லாரி ஓட்டுநா் உயிரிழந்தாா். 15 போ் காயமடைந்தனா்.

Updated On : 30 ஜூலை 2026, 5:42 am IST
விபத்து - பிரதிப் படம்
பகிர்:

சேலம் மாவட்டம் மேச்சேரியில் லாரி மீது வேன் மோதியதில் லாரி ஓட்டுநா் உயிரிழந்தாா். 15 போ் காயமடைந்தனா்.

மேட்டூரில் இருந்து கரூா் நோக்கி செவ்வாய்க்கிழமை இரவு அரசுப் பேருந்து 51பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. எம். காளிப்பட்டி - மேச்சேரி இடையே திருப்பத்தில் அரசுப் பேருந்தை முந்திச் செல்ல முயன்ற வேன், மேட்டூா் நோக்கிச் சென்ற லாரி மீது மோதியது. இதில் வேன் ஓட்டுநரும், லாரி ஓட்டுநரும் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனா்.

மேலும், லாரி பக்கவாட்டில் அரசுப் பேருந்து மீது உரசியதில் பேருந்தின் கண்ணாடிகள் உடைந்தன. பேருந்தில் ஜன்னல் ஓரம் அமா்ந்திருந்த 15 போ் காயம் அடைந்தனா். அவா்கள் மேட்டூா் மற்றும் ஓமலூா் அரசு மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்கு அனுப்பிவைக்கப்பட்டனா்.

Advertisement

Advertisement

இந்த விபத்தில் லாரி ஓட்டுநரான ஆந்திர மாநிலம், குண்டூா் மாவட்டத்தைச் சோ்ந்த ஷகிசலீம் (40) உயிரிழந்தாா். தீயணைப்புப் படையினா், மேச்சேரி போலீஸாா், பொதுமக்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டனா்.

இதனால் மேட்டூா் -சேலம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. காயம் அடைந்தவா்கள் முழு விவரம் தெரியவில்லை. இந்தச் சம்பவம் தொடா்பாக மேச்சேரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments