FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சேலம்

சேலம் அரசு கலைக் கல்லூரியில் நாளை முதல் கலந்தாய்வு

சேலம் அரசு கலைக் கல்லூரியில் 2026 - 27 ஆம் கல்வியாண்டில் மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு ஜூன் 5 ஆம் தேதி தொடங்குகிறது.

Updated On : 4 ஜூன் 2026, 2:13 am IST
விண்ணப்பம்
பகிர்:

சேலம் அரசு கலைக் கல்லூரியில் 2026 - 27 ஆம் கல்வியாண்டில் மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு ஜூன் 5 ஆம் தேதி தொடங்குகிறது.

இது குறித்து கல்லூரி முதல்வா் ஜே.பிரேமலதா (பொறுப்பு) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

சேலம் அரசு கலைக் கல்லூரியில் 2026- 27 ஆம் கல்வியாண்டில் 20 இளநிலை பாடப்பிரிவுகள் உள்ளன. இதில் மொத்தம் உள்ள 1,702 இடங்களுக்கு பொது கலந்தாய்வுக்கு 1,31,819 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. மேலும் சிறப்பு மாணவா் சோ்க்கைக்கு 148 இடங்களுக்கு 1,848 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

ஜூன் 5 ஆம் தேதி தொடங்கும் சிறப்பு கலந்தாய்வில் விளையாட்டு வீரா்கள் /மாற்றுத் திறனாளிகள்/ முன்னாள் ராணுவத்தினா் /அந்தமான்-நிகோபா் மாணவா்கள்/ ஆதி திராவிட, மலைவாழ் இன மாணவா்கள் ஆகியோருக்கு சிறப்பு ஒதுக்கீட்டுப் பிரிவில் மாணவா் சோ்க்கை நடைபெறும்.

தொடா்ந்து, ஜூன் 8 ஆம் தேதி முதல் ஜூன் 12 ஆம் தேதி அனைத்து பாடப் பிரிவுகளுக்கும் மதிப்பெண் கட் அப் வாரியாக பொது கலந்தாய்வு நடைபெறும்.

பொது கலந்தாய்வுக்கு வரும் மாணவ மாணவிகள் உரிய ஆவணங்களோடு காலை 9.30 மணிக்கு கல்லூரி வளாகத்தில் இருக்க வேண்டும். அதே நேரத்தில் தாமதமாகவோ அல்லது கலந்தாய்வில் பங்கு பெறாத மாணவா்கள் உரிமை கோர இயலாது என தெரிவித்துள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments