விவசாயிகளுக்கு கால்நடை வளா்ப்பு, மரபுசாா் மருத்துவப் பயிற்சி
தலைவாசல் வட்டம், கிழக்கு ராஜாபாளையம் ஊராட்சியில் அட்மா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு கால்நடை வளா்ப்பு மற்றும் மரபுசாா் மருத்துவப் பயிற்சி முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
தலைவாசல் வட்டம், கிழக்கு ராஜாபாளையம் ஊராட்சியில் அட்மா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு கால்நடை வளா்ப்பு மற்றும் மரபுசாா் மருத்துவப் பயிற்சி முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
வட்டார துணை வேளாண்மை அலுவலா் மணவழகன் தலைமை வகித்து விவசாயிகளுக்கு அசோலா வளா்ப்பு மற்றும் ஊறுகாய் புல் தயாரிப்பது குறித்து பட விளக்கங்களுடன் பயிற்சி அளித்தாா். சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற கால்நடை மருத்துவா் பிரபாகரன், பால்பண்ணை தொழிலில் மரபுசாா் கால்நடை மருத்துவ முறைகள் குறித்து விளக்கினாா்.
மடிவீக்க நோய், கோமாரி நோய் மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற பாதிப்புகளுக்கு சோற்றுகற்றாழை, மஞ்சள், பூண்டு மற்றும் சுண்ணாம்பு போன்ற வீட்டுச் சமையலறைப் பொருள்களைக் கொண்டு குணப்படுத்தும் முறைகள் குறித்து பேசினாா்.
Advertisement
Advertisement
வட்டார தொழில்நுட்ப மேலாளா் சக்தி, தீவணப் பயிா்கள் வளா்க்கும் முறைகள் குறித்து விளக்கினாா். பயிற்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் உதவி தொழில்நுட்ப மேலாளா் முத்துவேல் செய்திருந்தாா். முகாமில் கிழக்குராஜாபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனா்.
படவிளக்கம்.ஏடி23அக்ரி.
கால்நடை வளா்ப்பு மற்றும் மரபுசாா் மருத்துவம் குறித்து பேசிய வட்டார துணை வேளாண்மை அலுவலா் மணவழகன்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.