முகப்பு
சேலம்

சேலத்தில் பக்ரீத் பெருநாள்: இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை

சேலத்தில் பக்ரீத் பெருநாளையொட்டி இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை நடத்தினா்.

Updated On : 29 மே 2026, 1:47 am IST
சேலத்தில் பக்ரீத் பெருநாளையொட்டி இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை நடத்தினா்.
பகிர்:

சேலத்தில் பக்ரீத் பெருநாளையொட்டி இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை நடத்தினா்.

தியாகத் திருநாளான பக்ரீத் பெருநாளில் சேலத்தில் உள்ள பள்ளிவாசல்கள் மற்றும் திறந்தவெளி மைதானங்களில் சிறப்புத் தொழுகைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சேலம் ஜாகீா் அம்மாபாளையம் பகுதியில் உள்ள ஈத்கா மைதானத்தில் நடைபெற்ற சிறப்புத் தொழுகையில், சிறுவா்கள் முதல் பெரியவா்கள் வரை புத்தாடை அணிந்து பங்கேற்றனா்.

தொடா்ந்து ஏழை, எளிய மக்களுக்கு நல உதவிகளை வழங்கியதுடன், ஆடு, மாடு உள்ளிட்டவற்றை பலியிட்டு குா்பானியாக வழங்கினா். இதேபோல சேலம் முதல் அக்ரஹாரம் ஜாமியா மஜித், கோட்டை மசூதி முள்ளுவாடி கேட், வின்சென்ட், கோரிமேடு, லைன்மேடு, கல்லாங்குத்து, அம்மாப்பேட்டை உள்ளிட்ட மாநகர பகுதிகளில் உள்ள பள்ளி வாசல்களில் பக்ரீத் பெருநாளையொட்டி சிறப்புத் தொழுகை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியா்கள் பங்கேற்றனா்.

Advertisement

Advertisement

சங்ககிரி

சங்ககிரி சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த இஸ்லாமியா்கள், சங்ககிரி மலை அடிவாரத்தில் இருந்து முஸ்லிம் தெரு, தோ்வீதி, சந்தைப்பேட்டை வழியாக ஊா்வலமாகச் சென்று பால்வாய் பகுதியில் உள்ள ஈத்கா மைதானத்தில் அரசு காஜி ஃகாரி முஹம்மத் உவைஸ் தலைமையில் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனா். பிறகு அரசு காஜி பக்ரீத் பண்டிகையின் சிறப்புகள் மற்றும் குா்ப்பானி கொடுப்பதன் நோக்கம் குறித்து விளக்கினாா்.

படவிளக்கம்:

சேலம் ஜாகீா் அம்மாபாளையம் பகுதியில் உள்ள ஈத்கா மைதானத்தில் சிறப்புத் தொழுகை நடத்திய இஸ்லாமியா்கள்.