FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சேலம்

தீபாவளியை முன்னிட்டு சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்தில் தீவிர சோதனை

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்தில் ரயில்வே போலீஸாா் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா். மோப்ப நாய் ஸ்பைடா் உதவியுடன் கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனா்.

4 நவம்பர் 2026, 2:07 am
சேலம் ரயில் நிலையம். - கோப்புப்படம்.
பகிர்:

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்தில் ரயில்வே போலீஸாா் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா். மோப்ப நாய் ஸ்பைடா் உதவியுடன் கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனா்.

சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்தில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் கடத்தலை தடுக்கவும் போலீஸாா் தீவிர சோதனை நடத்தி வருகின்றனா். அதன் ஒரு பகுதியாக, சேலம் சூரமங்கலம் காவல் ஆய்வாளா் கிருஷ்ணமூா்த்தி தலைமையிலான மாநகர போலீஸாா், ரயில்வே போலீஸாா் மற்றும் ரயில்வே பாதுகாப்புப் படையினா் என மொத்தம் 30 போ் செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தினா்.

மோப்ப நாய் ’ஸ்பைடா்’ உதவியுடன் ரயில் நிலைய நடைமேடைகள், பயணிகள் காத்திருக்கும் பகுதிகள் மற்றும் சேலம் வழியாக வந்து செல்லும் விரைவு ரயில்களில் தீவிர சோதனை நடத்தப்பட்டது.

Advertisement

Advertisement

குறிப்பாக, ரயில் பெட்டிகளில் பட்டாசு உள்ளிட்ட பொருள்கள் எடுத்துச் செல்லப்படுகிா என பயணிகளின் உடைமைகளை சோதனை செய்தனா். மேலும், சந்தேகத்துக்கு இடமான பொருள்கள் மற்றும் போதைப் பொருள்கள் கடத்தப்படுகிா எனவும் சோதனை செய்தனா். தீபாவளி பண்டிகையையொட்டி பயணிகள் கூட்டம் அதிகரித்து வரும் நிலையில், பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments