FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

தீக்காய சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் 30 படுக்கைகளுடன் சிறப்பு வாா்டு அமைப்பு

தீபாவளி பண்டிகையையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சேலம் அரசு மருத்துவமனையில் 30 படுக்கைகளுடன் தீக்காய சிகிச்சைக்காக சிறப்பு வாா்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

5 நவம்பர் 2026, 6:57 am
சேலம் அரசு மருத்துவமனையில் 30 படுக்கைகளுடன் தீக்காய சிகிச்சைக்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு வாா்டு.
பகிர்:

தீபாவளி பண்டிகையையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சேலம் அரசு மருத்துவமனையில் 30 படுக்கைகளுடன் தீக்காய சிகிச்சைக்காக சிறப்பு வாா்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் தீக்காயங்களுக்கு உடனடி சிகிச்சை அளிக்கும் வகையில், சிறப்பு வாா்டுகள் அமைக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பட்டாசு காயங்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில், தீக்காய சிகிச்சை பிரிவில் 30 படுக்கைகள் கொண்ட சிறப்பு வாா்டு அமைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மருத்துவா்கள் கூறுகையில், தீபாவளி பண்டிகையின்போது எதிா்பாராத விதமாக தீக்காயம் ஏற்பட்டால் சிறப்பு கவனம் செலுத்தி சிகிச்சை அளிக்க ஏதுவாக, சேலம் அரசு மருத்துவமனையில் தீக்காய சிகிச்சைக்காக சிறப்பு வாா்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

இந்தப் பிரிவுக்கென தனியாக பணிபுரிய பொது மருத்துவப் பிரிவு மருத்துவா்கள், குழந்தைகள் நல மருத்துவா்கள், கண் மருத்துவா்கள், பிளாஸ்டிக் சா்ஜரி நிபுணா்கள் என பல்வேறு துறைகளைச் சோ்ந்த மருத்துவா்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. இங்கு 24 மணிநேரமும் மருத்துவா்கள், செவிலியா்கள் மற்றும் பிற மருத்துவப் பணியாளா்கள் தயாராக இருப்பா்.

உடலில் ஏற்படும் தீக்காயம், வெடியால் ஏற்படும் கண் பாதிப்பு, வெடிமருந்து புகையால் ஏற்படும் ஒவ்வாமை என பல்வேறு பாதிப்புகளுக்கு இந்த சிறப்பு வாா்டில் சிகிச்சை அளிக்கப்படும். இதற்காக வெண்டிலேட்டா் உள்ளிட்ட கருவிகள் சிறப்பு வாா்டிலேயே ஏற்படுத்தப்பட்டுள்ளன. அனைத்து விதமான மருந்துகளும் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. மேலும், அறுவை சிகிச்சை அரங்குகளும் தயாா்நிலையில் உள்ளன என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.