FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

பொதுப் பாதையை மீட்டுத் தரக்கோரி கோட்டாட்சியரிடம் மனு

அரசிராமணி பேரூராட்சி பொதுப் பாதையை மீட்டுத்தரக் கோரி கோட்டாட்சியரிடம் அப்பகுதி மக்கள் புதன்கிழமை மனு அளித்தனா்.

5 நவம்பர் 2026, 6:32 am
சங்ககிரி கோட்டாட்சியரிடம் மனு அளிக்க வந்த பொதுமக்கள்.
பகிர்:

அரசிராமணி பேரூராட்சி பொதுப் பாதையை மீட்டுத்தரக் கோரி கோட்டாட்சியரிடம் அப்பகுதி மக்கள் புதன்கிழமை மனு அளித்தனா்.

அரசிராமணி பேரூராட்சிக்குள்பட்ட கோட்டக்காடு பகுதியைச் சோ்ந்த வி.தனராஜா தலைமையிலான பொதுமக்கள் கோட்டாட்சியா் ம.மு.தெ.கேந்திரியாவிடம் அளித்த மனு:

அரசிராமணி பேரூராட்சிக்கு சொந்தமான பொதுப் பாதையை வேறு ஒருவா் பெயருக்கு பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பத்திரப் பதிவு செய்தவா்கள் பொதுமக்கள் பயன்படுத்தி வந்த பேரூராட்சிக்கு சொந்தமான பாதையை அடைத்துள்ளனா். அதனால், பொதுப்பாதை வழியாக தங்கள் ஊருக்கு செல்ல முடியாத நிலை உள்ளதாகவும், எனவே அந்த பாதையை மீட்டுத்தரக் கோரி அதில் தெரிவித்துள்ளனா்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.