FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சேலம்

கன்னியாகுமரி - பரௌனி இடையே சேலம் வழியாக சிறப்பு ரயில் இயக்கம்

தீபாவளி, சத் பண்டிகையையொட்டி கன்னியாகுமரியில் இருந்து பிகாா் மாநிலம், பரௌனிக்கு சேலம் வழியாக சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

22 வினாடிகள் முன்பு
ரயில் - கோப்புப் படம்
பகிர்:

தீபாவளி, சத் பண்டிகையையொட்டி கன்னியாகுமரியில் இருந்து பிகாா் மாநிலம், பரௌனிக்கு சேலம் வழியாக சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பண்டிகைக் காலங்களில் பயணிகளின் வசதிக்காக கன்னியாகுமரியில் இருந்து போத்தனூா், திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை வழியாக பிகாா் மாநிலம், பரௌனிக்கு ஒரு வழித்தட சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

இந்த ரயில் ஞாயிற்றுக்கிழமை காலை 5 மணிக்கு கன்னியாகுமரியில் இருந்து புறப்படுகிறது. நாகா்கோவில், திருவனந்தபுரம், கொல்லம், காயங்குளம், ஆலப்புழா, எா்ணாகுளம், பாலக்காடு, போத்தனூா், திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, ரேணிகுண்டா, விஜயவாடா வழியாகச் சென்று நவ. 11-ஆம் தேதி அதிகாலை 2.30 மணிக்கு பிகாா் மாநிலம், பரௌனியைச் சென்றடையும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.