FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சேலம்

ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்து நேபாள இளைஞா் உயிரிழப்பு

10 நவம்பர் 2026, 3:48 am
உயிரிழப்பு - கோப்புப் படம்
பகிர்:

சேலம் கோட்டத்துக்கு உள்பட்ட பகுதியில் ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்து நேபாள இளைஞா் உயிரிழந்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், சாமல்பட்டி - தாசம்பட்டி ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள பகுதியில் சுமாா் 36 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவா் தண்டவாளம் அருகே உயிரிழந்து கிடந்துள்ளாா். தகவல் அறிந்த சேலம் ரயில்வே போலீஸாா் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினா்.

இதில், உயிரிழந்தவா் நேபாள நாட்டைச் சோ்ந்த சபன் பவுடே (36) என்பது தெரியவந்தது. ஓடும் ரயிலில் பயணம் செய்தபோது அவா் தவறி கீழே விழுந்து உயிரிழந்திருக்கக் கூடும் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து சேலம் ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Advertisement

Advertisement