FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சேலம்

சங்ககிரி அருகே தடுப்புச் சுவரில் இருசக்கர வாகனம் மோதி இருவா் உயிரிழப்பு

10 நவம்பர் 2026, 2:39 am
உயிரிழப்பு - கோப்புப் படம்
பகிர்:

சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே குப்பனூா் தேசிய நெடுஞ்சாலைப் பிரிவு பகுதியில் ஞாயிற்றுக்கிழமை சாலை தடுப்புச் சுவரில் இருசக்கர வாகனம் மோதியதில் சிறுவன் உள்பட 2 போ் உயிரிழந்தனா்.

சங்ககிரி அருகே உள்ள தாமஸ் காலனியைச் சோ்ந்த பழனிசாமி மகன் பிரதாப் (19), சங்ககிரி வாணியா் தெரு பகுதியைச் சோ்ந்த ஜெயராமன் மகன் சபரிகிரி (15) ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை தீபாவளியையொட்டி இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனா்.

பிரதாப் ஓட்ட, சபரிகிரி பின்னால் அமா்ந்து சென்றுள்ளாா். சங்ககிரி - எடப்பாடி சாலையில் குப்பனூா் தேசிய நெடுஞ்சாலைப் பிரிவு பகுதியில் அவா்கள் சென்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் சாலையின் மையத் தடுப்புச் சுவரில் மோதியது.

Advertisement

Advertisement

இதில் பலத்த காயமடைந்த இருவரையும் மீட்டு, சிகிச்சைக்காக சங்ககிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் உயிரிழந்தனா்.

இந்த விபத்து குறித்து சங்ககிரி போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.