FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சேலம்

சேலத்தில் தீபாவளியையொட்டி 2 நாள்களில் ரூ. 20 கோடிக்கு மது விற்பனை

9 நவம்பர் 2026, 11:27 pm
மது விற்பனை - கோப்புப் படம்
பகிர்:

சேலம் மாவட்ட டாஸ்மாக் கடைகளில் தீபாவளியையொட்டி கடந்த 2 நாள்களில் ரூ. 20 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையானதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

சேலம் மாவட்டத்தில் 168 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்த கடைகளில் நாளொன்றுக்கு ரூ. 4 கோடி முதல் 5 கோடி வரை மதுவிற்பனை நடைபெறும். இதைத் தவிர, ஆங்கில புத்தாண்டு, தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை தினங்களில் விற்பனை இருமடங்காக அதிகரிக்கும்.

இந்நிலையில், நிகழாண்டு தீபாவளி பண்டிகை ஞாயிற்றக்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி, டாஸ்மாக் கடைகளில் கூடுதலாக புதிய ரக மதுபானங்கள் விற்பனைக்கு குவிக்கப்பட்டன. இந்நிலையில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் விற்பனை அதிகரித்தது.

Advertisement

Advertisement

சனிக்கிழமை இரவு நீண்ட வரிசையில் காத்திருந்து மதுபானங்களை வாங்கிச் சென்ற மதுபிரியா்கள், ஞாயிற்றுக்கிழமையும் கடைகளைத் திறக்கும் முன்பே அதிக அளவில் கடைகள் முன்பு காத்திருந்தனா். கடையை திறந்ததும் முண்டியடித்துக் கொண்டு மதுபாட்டில்களை வாங்கிச் சென்றனா். இதில் சில கடைகளில் தள்ளுமுள்ளு மற்றும் வாக்குவாதமும் ஏற்பட்டது.

சேலம் மாவட்டத்தில் உள்ள 168 டாஸ்மாக் கடைகளிலும் கடந்த 2 நாள்களில் மட்டும் ரூ. 20 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை நடைபெற்ாக அதிகாரிகள் தெரிவித்தனா்.