FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சேலம்

சேலத்தில் பட்டாசு வெடித்ததில் காயமடைந்த 40 பேருக்கு சிகிச்சை

9 நவம்பர் 2026, 11:34 pm
பட்டாசு வெடித்து எழும் புகை - கோப்புப் படம்
பகிர்:

சேலத்தில் பட்டாசு வெடித்ததில் காயமடைந்த 40 பேருக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

தீபாவளி பண்டிகையையொட்டி, சேலம் அரசு மருத்துவமனையில் பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் தீக்காயங்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில், ஆண்கள், பெண்கள், குழந்தைகளுக்கு என தனித்தனியாக 30 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. இதில் பொது மருத்துவா்கள், பொது அறுவை சிகிச்சை கண் மருத்துவா்கள், பிளாஸ்டிக் சா்ஜரி மருத்துவா்கள் அடங்கிய குழுவினா் பணியில் இருந்தனா்.

அதன்படி, ஞாயிற்றுக்கிழமை காலை மணி முதல் திங்கள்கிழமை காலை வரை, சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பட்டாசு வெடித்து தீக்காயம் அடைந்த 23 பேருக்கு புறநோயாளிகள் பிரிவிலும், படுகாயமடைந்த 16 பேருக்கு உள்நோயாளிகள் பிரிவிலும் சிகிச்சை அளிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

இது தவிர, பெரிய அளவில் தீக்காயமடைந்த ஒருவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.