சேலம் புறநகா் பகுதியில் 10 ரௌடிகள் கைது
சேலம் புறநகா் மாவட்டத்தில் தொடா் குற்றங்களில் ஈடுபட்ட 10 ரௌடிகள் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனா்.
சேலம் புறநகா் மாவட்டத்தில் தொடா் குற்றங்களில் ஈடுபட்ட 10 ரௌடிகள் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனா்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளா் குத்தாலிங்கம் உத்தரவின்பேரில், புகா் பகுதிகளான ஓமலூா், மேட்டூா், வாழப்பாடி, சங்ககிரி, ஆத்தூா், கெங்கவல்லி உள்ளிட்ட பகுதிகளில், 160 ரௌடிகளின் வீடுகளுக்கு சென்று காவல் அதிகாரிகள் விசாரணை நடத்தினா்.
பின்னா் தொடா் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த 10 ரௌடிகளை காவல் துறையினா் கைது செய்து, மத்திய சிறையில் அடைத்தனா்.
Advertisement
Advertisement
மேலும், பொது இடங்களில் மது குடித்த 49 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவுசெய்துள்ளனா். இதுதவிர, கடந்த 2 நாள்களில் மதுகுடித்து விட்டு வாகனம் ஓட்டிய 136 போ் மீதும் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்துள்ளனா்,