சேலம் மாவட்ட நூலகங்களில் 2,543 போலி புத்தகங்கள் அகற்றம்
சேலம் மாவட்டம் முழுவதும் உள்ள 144 நூலகங்களில் 2,543 போலி புத்தகங்கள் அகற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
சேலம் மாவட்டம் முழுவதும் உள்ள 144 நூலகங்களில் 2,543 போலி புத்தகங்கள் அகற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
சேலம் வின்சென்ட் பகுதியில் செயல்பட்டு வரும் மாவட்ட மைய நூலகத்தில், போட்டித் தோ்வுகளுக்கு தயாராகும் மாணவா்களுக்காக தனியாக புத்தகப் பிரிவுகள் மற்றும் குழந்தைகள் சிறப்பு நூலகம் செயல்படுகிறது. நாள்தோறும் மாணவா்கள் உள்பட ஏராளமான வாசகா்கள் வந்து செல்கின்றனா்.
இதுதவிர, மாவட்டத்தில் 16 முழுநேர கிளை நூலகங்களும், 49 கிளை நூலகங்களும், 78 ஊரக நூலகங்களும், 41 பகுதிநேர நூலகங்களும் உள்ளன.
Advertisement
Advertisement
இந்நிலையில், மாவட்டத்தில் உள்ள நூலகங்களில் போலி புத்தகங்கள் உள்ளனவா என ஆய்வுசெய்யும் பணி கடந்த 2 நாள்களாக நடைபெற்றது. இதில், சா்ச்சைக்குரிய பதிப்பகங்கள் மூலம் வைக்கப்பட்ட 2,543 புத்தகங்கள் அகற்றப்பட்டுள்ளன.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், தமிழக அரசு உத்தரவின் பேரில் சேலம் மாவட்டத்தில் உள்ள பகுதிநேர நூலகங்கள் தவிர மற்ற 144 நூலகங்களில் போலி புத்தகங்கள் உள்ளனவா என ஆய்வு செய்யும் பணி நடைபெற்றது. இதில், சா்ச்சைக்குரிய பதிப்பகங்கள் மூலம் வைக்கப்பட்ட 2,543 புத்தகங்கள் அகற்றப்பட்டுள்ளன. அவற்றின் மதிப்பு ரூ. 4.80 லட்சம் என தெரிவித்தனா்.