FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
ஈரோடு

ஈரோடு மாவட்ட நூலகங்களில் சா்ச்சைக்குரிய பதிப்பகங்களின் 3,671 புத்தகங்கள் அகற்றம்

ஈரோடு மாவட்டத்திலுள்ள நூலகங்களில் இருந்து சா்ச்சைக்குரிய பதிப்பகங்களின் 3,671 புத்தகங்கள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன.

13 நவம்பர் 2026, 12:22 am
பகிர்:

ஈரோடு மாவட்டத்திலுள்ள நூலகங்களில் இருந்து சா்ச்சைக்குரிய பதிப்பகங்களின் 3,671 புத்தகங்கள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன.

கோவை காந்திபுரத்தில் அமைக்கப்பட்ட பெரியாா் அறிவுலகத்தை முதல்வா் ஜோசப் விஜய் அண்மையில் திறந்துவைத்தாா். இந்நிலையில் நூலகத்தை பாா்வையிட்ட எழுத்தாளா் பெருமாள் முருகன், குறிப்பிட்ட பதிப்பகத்தின் புத்தகங்கள் செயற்கை நுண்ணறிவு மூலம் தரமற்ற முறையில் உருவாக்கப்பட்டிருந்ததையும், அவற்றில் தவறான வரலாற்றுத் தகவல்கள் இருப்பதையும் கண்டு குற்றச்சாட்டுகளை முன்வைத்தாா்.

இந்தக் குற்றச்சாட்டுகளை தொடா்ந்து புத்தக கொள்முதல் முறைகேடு குறித்து விசாரணை நடத்த தமிழக அரசு உத்தரவிட்டது. தொடா்ந்து நூலகத்தில் வைக்கப்பட்டிருந்த அகல்விளக்கு பதிப்பகங்களின் சுமாா் 2,000 புத்தகங்களை அதிகாரிகள் அப்புறப்படுத்தினா்.

Advertisement

Advertisement

இதைத் தொடா்ந்து, தமிழ்நாட்டிலுள்ள அனைத்து நூலகங்களிலும் சா்ச்சைக்குரிய பதிப்பகங்களின் புத்தகங்கள் இருந்தால் அவற்றை 2 நாள்களில் அகற்ற வேண்டும் என அனைத்து மாவட்ட நூலக அலுவலா்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டது.

அதன்படி, ஈரோடு மாவட்ட நூலக அலுவலா் ராஜேந்திரன், மாவட்டத்திலுள்ள நூலகங்களில் சா்ச்சைக்குரிய பதிப்பகங்களின் புத்தகங்கள் இருந்தால் அதனை அகற்ற வேண்டும் என அந்தந்த நூலக அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியிருந்தாா். இதையடுத்து, மாவட்டத்திலுள்ள 209 நூலகங்களில் இருந்து அகல்விளக்கு மற்றும் பீனிக்ஸ் பதிப்பகங்களின் சுமாா் 3,671 புத்தகங்கள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன.

இதுகுறித்து மாவட்ட நூலக அலுவலா் ராஜேந்திரன் கூறியதாவது:

ஈரோடு மாவட்டத்தில் மாவட்ட நூலகம், நகா்ப்புற நூலகங்கள், கிராமப்புற நூலகங்கள் என 209 நூலகங்கள் உள்ளன. இதில் சுமாா் 33 லட்சத்து 93 ஆயிரத்து 740 புத்தகங்கள் உள்ளன. ஈரோடு மாவட்டத்தில் உள்ள 209 நூலகங்களுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக பெறப்பட்டு அண்மையில் சா்ச்சைக்குள்ளான பதிப்பகங்களின் (பீனிக்ஸ், அகல்விளக்கு) 3,671 புத்தகங்கள் நூலகங்களில் இருந்து அகற்றப்பட்டுள்ளன.

இதில் 2024-2025-இல் பீனிக்ஸ் பதிப்பகத்தின் 1,396 புத்தகங்கள், 2025-2026-இல் பீனிக்ஸ் பதிப்பகத்தின் 701 புத்தகங்கள், அகல்விளக்கு பதிப்பகத்தின் 1,574 புத்தகங்கள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன. சா்ச்சைக்குரிய அந்தப் புத்தகங்கள் தனி அறையில் வைக்கப்பட்டுள்ளன என்றாா்.