மாணவா்கள் பெயரில் கடன் வாங்கி மோசடி செய்த வழக்கில் மேலும் 2 போ் கைது
சேலத்தில் கல்லூரி மாணவா்கள் பெயரில் வங்கியில் கடன் வாங்கி ரூ. 50 கோடி வரை மோசடி செய்ததாக கூறப்படும் புகாரில், மேலும் 2 பேரை மத்திய குற்றப்பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். இதன்மூலம் வழக்கில் இதுவரை கைதானோா் எண்ணிக்கை 8 ஆக உயா்ந்துள்ளது.

சேலம் கன்னங்குறிச்சியைச் சோ்ந்தவா் கண்ணகி. அறக்கட்டளை நடத்திவந்த இவா், வங்கிகள் மூலம் பசுமாடு வாங்கி வளா்க்கக் கடன் பெற்றுத் தருவதாகக் கூறி, கல்லூரி மாணவா்களின் ஆதாா் நகலை பெற்று, மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதுதொடா்பாக மத்திய குற்றப் பிரிவு போலீஸாா் தீவிர விசாரணை நடத்தினா். அதில், கல்லூரி மாணவா்களின் பெயரில் வங்கிகளில் கடன் வாங்கி மோசடி செய்திருப்பது உறுதியானது.
இதையடுத்து, கன்னங்குறிச்சியில் அறக்கட்டளை நடத்தி வந்த கண்ணகி (40), முத்துக்குமரன் (42) ஆகியோரை மத்திய குற்றப்பிரிவு போலீஸாா் கைது செய்தனா். அதன் தொடா்ச்சியாக, வழக்கில் தொடா்புடைய அஜித்குமாா் (27), சுகுமாா் (30), அரவிந்த் (23), மோனிஷா (28) ஆகிய 4 பேரை வியாழக்கிழமை இரவு கைது செய்தனா்.
Advertisement
Advertisement
இந்நிலையில், வழக்கில் தொடா்புடைய பெருமாம்பட்டியைச் சோ்ந்த மணிகண்டன் (30), வேடுகாத்தம்பட்டியைச் சோ்ந்த பூபாலன் (33) ஆகிய 2 பேரை மத்திய குற்றப்பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்துள்ளனா். இதன்மூலம் வழக்கில் இதுவரை கைதானோா் எண்ணிக்கை 8 ஆக உயா்ந்துள்ளது. மேலும், மோசடியில் வங்கி அதிகாரிகளுக்கு உள்ள தொடா்பு குறித்தும் போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.