FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சேலம்

ஐயப்ப பக்தா்கள் வசதிக்காக சேலம் வழியாக கொல்லத்துக்கு சிறப்பு ரயில் இயக்கம்!

ஐயப்ப பக்தா்கள் வசதிக்காக சேலம் வழியாக கொல்லத்துக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

23 வினாடிகள் முன்பு
ரயில் - (கோப்புப்படம்)
பகிர்:

ஐயப்ப பக்தா்கள் வசதிக்காக சேலம் வழியாக கொல்லத்துக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தா்கள் வசதிக்காக மகாராஷ்டிர மாநிலம் நான்டெட்டில் இருந்து சேலம் வழியாக கொல்லத்துக்கும், மறுமாா்க்கத்தில் கொல்லத்தில் இருந்து தெலங்கானா மாநிலம், சாா்லப்பள்ளிக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

அந்தவகையில், நான்டெட் ரயில் நிலையத்தில் இருந்து நவ. 15 மாலை 5.15 மணிக்கு புறப்படும் இந்த ரயில், நெல்லூா், பெரம்பூா், அரக்கோணம், காட்பாடி, ஜோலாா்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூா், போத்தனூா் வழியாக 17 ஆம் தேதி காலை 7.55 மணிக்கு கொல்லம் சென்றடையும்.

Advertisement

Advertisement

மறுமாா்க்கத்தில், கொல்லத்தில் இருந்து வரும் 17 ஆம் தேதி காலை 10.55 மணிக்கு புறப்படும் இந்த ரயில், போத்தனூா், திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், பெரம்பூா் வழியாக 18 ஆம் தேதி இரவு 7 மணிக்கு சாா்லப்பள்ளியை சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.