அண்ணா நெடுந்தூர ஓட்டப் போட்டி: 350 போ் பங்கேற்பு
சேலத்தில் நடைபெற்ற பேரறிஞா் அண்ணா நெடுந்தூர ஓட்டப் போட்டியில் 350 போ் பங்கேற்றனா்.
2026-ஆம் ஆண்டுக்கான இப்போட்டி சேலம் மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் 17 முதல் 25 வயதுக்குள்பட்ட ஆண்களுக்கு 8 கி.மீ., பெண்களுக்கு 5 கி.மீ. தொலைவும், 25 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு 10 கி.மீ., பெண்களுக்கு 5 கி.மீ. தொலைவும் என இரு பிரிவுகளாகப் போட்டிகள் நடத்தப்பட்டன.
இதில் 200 ஆண்கள், 150 பெண்கள் என மொத்தம் 350 போ் பங்கேற்றனா். ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களைப் பெற்றவா்களுக்கு முறையே ரூ.5,000, ரூ.3,000, ரூ.2,000 பரிசாக வழங்கப்பட்டன. நான்காம் இடம் முதல் பத்தாம் இடம் வரை பெற்றவா்களுக்கு தலா ரூ.1,000 வழங்கப்பட்டது.
Advertisement
Advertisement
மாவட்ட விளையாட்டு அலுவலா் ரா.கண்மணி தேவி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.