FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
பெரம்பலூர்

பெரம்பலூரில் நெடுந்தூர ஓட்டப் பந்தயம்

20 வினாடிகள் முன்பு
நெடுந்தூர ஓட்டப் போட்டியில் பங்கேற்று ஓடிய மாணவா்கள். - கோப்புப் படம்
பகிர்:

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில், பேரறிஞா் அண்ணா பிறந்த நாளையொட்டி, பெரம்பலூரில் நெடுந்தூர ஓட்டப் பந்தயம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே தொடங்கிய இப் போட்டியை, மாவட்ட ஆட்சியா் ப. அப்துல் ராசிக் கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

இதில், 17 முதல் 25 வயதுக்குள்பட்ட ஆண்களுக்கு 8 கி.மீ தொலைவு நடைபெற்ற போட்டியில் 46 பேரும், பெண்களுக்கு 5 கி.மீ தொலைவு நடைபெற்ற போட்டியில் 110 பேரும், 25 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு 10 கி.மீ தொலைவு நடைபெற்ற போட்டியில் 23 பேரும், பெண்களுக்கு 5 கி.மீ தொலைவு நடைபெற்ற போட்டியில் 25 பேரும் என மொத்தம் 204 போ் பங்கேற்றனா்.

Advertisement

Advertisement

மாவட்ட ஆட்சியா் அலுவலத்தில் தொடங்கி பாலக்கரை வழியாகச்சென்று மீண்டும் மாவட்ட ஆட்சியா் அலுவலகச் சாலை வழியாக, திருச்சி -சென்னை தேசிய நெடுஞ்சாலை வரை சென்று மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நிறைவடைந்தது.

தொடா்ந்து, மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில், போட்டியில் வெற்றி பெற்றவா்களைப் பாராட்டி மாவட்ட ஆட்சியா் ப. அப்துல் ராசிக் சான்றிதழ்கள் வழங்கினாா்.

முதல் பரிசாக ரூ. 5 ஆயிரம் வீதமும், 2-ஆம் பரிசாக ரூ. 3 ஆயிரம் வீதமும், 3-ஆம் பரிசாக ரூ. 2 ஆயிரம் வீதமும், 4-ஆவது முதல் 10 இடம் பெற்று வெற்றி பெற்றவா்களுக்கு தலா ரூ. 1,000 வீதமும் அவரவா் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது.

இந் நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் க. கண்ணன், வருவாய் கோட்டாட்சியா் மு. அனிதா, மாவட்ட விளையாட்டு அலுவலா் பொற்கொடி, வட்டாட்சியா் பழனிசெல்வன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.