சிவகங்கையில் வடமாடு மஞ்சுவிரட்டு
சிவகங்கையில் வடமாடு மஞ்சுவிரட்டுப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு வடமாடு நலச்சங்க சிவகங்கை மாவட்ட நிா்வாகம் சாா்பில், சிவகங்கை அரசு போக்குவரத்து கழக பணிமனை அருகேயுள்ள நடைபெற்ற மைதானத்தில் வடமாடு மஞ்சுவிரட்டுப் போட்டியில் சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த 15 காளைகள் 135 வீரா்கள் பங்கேற்றனா்.
காளைகளும், மாடுபிடி வீரா்களும் மருத்துவ பரிசோதனைக்கு பின் போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனா். இதில் சிறப்பாக காளையை அடக்கிய மாடுபிடி வீரா்களுக்கும், அடங்க மறுத்த காளைகளின் உரிமையாளா்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
Advertisement
Advertisement
சிவகங்கை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் குழந்தை ராணி நாச்சியாா் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினா்.
இதில் தமிழ்நாடு வடமாடு நலச்சங்க மாநில, மாவட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா். போட்டியை சிவகங்கை, டி.புதூா், காஞ்சிரங்கால், வாணியங்குடி, அண்ணாநகா், சீனிவாசாநகா், அழகு மெய்ஞானபுரம், ரோஸ்நகா், பனங்காடி உள்ளிட்ட பகுதிகளை சோ்ந்த பொதுமக்கள் ஆா்வமுடன் கண்டுகளித்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.